ADDED : நவ 11, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மதுரை யை சே ர்ந்தவர் பூச்சியம்மாள் 80. ஓராண்டுக்கு முன்பு திருமங்கலம் பகுதிக்கு உறவினர்கள் அழைத்து வந்து தெருவில் விட்டுவிட்டு சென்றனர்.
செய்வது அறியாது திகைத்த மூதாட்டி, அண்ணாநகர் பகுதி வீடுகளின் வாசலில் தங்கி வாழ்ந்தார். அப்பகுதி மக்கள் உணவளித்து ஆதரவு அளித்தனர். அவருக்கு உடல்நலம் பாதித்தது.
யாரும் கண்டு கொள்ளவில்லை. தகவல் அறிந்த நகராட்சி சுகாதார அலுவலர் சிக்கந்தர், மருத்துவமனையில் மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததோடு, நெமிழிஸ்ரீ ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார்.

