UPDATED : நவ 07, 2026 01:05 AM
ADDED : நவ 07, 2026 01:02 AM
அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: மரியம்மாள் குளத்தில் மயானத்தை மறைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலங்காநல்லுார் மெயின் ரோட்டருகே பொதுமயானம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி செடி, கொடிகள் அடர்ந்து காடு போன்று காட்சியளிக்கிறது. மயான தகனமேடையில் படர்ந்து மறைத்து விட்டன.
பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் வசிப்பிடமாக உள்ளது. மயானத்தின் 'காம்பவுண்ட்' சுவர் இடிந்து எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளதால், விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனே மயானத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
