ADDED : ஜன 16, 2026 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழிகாட்டும் தனியார் 'உதவி மையங்கள்' ஆங்காங்கே உள்ளன. டீன் அலுவலக வளாகத்திற்குள் மருந்தகம் அருகே நிரந்தர உதவி மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழிகாட்டப்பட்டது.
தற்போது உட்பகுதியில் ஆர்.எம்.ஓ., அலுவலகம் செல்லும் வழியில் இம்மையம் ஓரமாக ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் வரும் நோயாளிகளுக்கு பயனில்லை. ஏற்கனவே மருந்தகம் அருகே இருந்த பழைய இடத்திற்கு உதவி மையத்தை மாற்ற வேண்டும்.
இதேபோல அந்தந்த வளாகத்தின் முன்பகுதியில் உதவி மையங்கள் அமைத்து நோயாளிகளுக்கு வழிகாட்ட வேண் டும்.

