/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போர் நினைவு சின்னம் பட்டா நிலத்தில் அமைக்க ஐகோர்ட் அனுமதி
/
போர் நினைவு சின்னம் பட்டா நிலத்தில் அமைக்க ஐகோர்ட் அனுமதி
போர் நினைவு சின்னம் பட்டா நிலத்தில் அமைக்க ஐகோர்ட் அனுமதி
போர் நினைவு சின்னம் பட்டா நிலத்தில் அமைக்க ஐகோர்ட் அனுமதி
ADDED : டிச 09, 2025 03:48 AM
மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பட்டா நிலத்தில், 'கணவாய் போர் நினைவு சின்னம்' அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்தது.
மதுரை மாவட்டம், மேலுார் சிவ.கலைமணி அம்பலம் தாக்கல் செய்த மனு:
நத்தம் கணவாயில், 1755ல் மேலுார் கள்ளர்கள், ஆங்கிலேய படைகளுக்கு இடையே ஒரு ரத்தக்களரி மோதல் நடந்தது. இதில், கள்ளர்கள் வெற்றி பெற்றனர்.
ஆங்கிலேய படைகள், திருமோகூர் கோவிலை கொள்ளையடித்து, சிலைகளை எடுத்துச் சென்றன. கர்னல் அலெக்சாண்டர் ஹெரான் தலைமையிலான அப்படை, நத்தம் கணவாய் வழியாக செல்லவிருந்தது.
சிலைகளை மீட்க, கள்ளர் சமூகத்தினர் ஹெரான் மற்றும் அவரது படைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், பலர் இறந்தனர். சிலைகளை மீட்பதில் கள்ளர் சமூகத்தினர் வெற்றி பெற்றனர். ஹெரான், 30 சிப்பாய்களுடன் திருச்சிக்கு திரும்பினார்.
நத்தம் அருகே புதுாரிலுள்ள என் பட்டா நிலத்தில், 'நத்தம் கணவாய் போர் நினைவு சின்னம்' அமைக்க அரசிடம் அனுமதி கோரினேன். நத்தம் தாசில்தார் நிராகரித்தார். அதை ரத்து செய்து, அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
ஒரு ஸ்துாபியை நிறுவுவதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட போவதில்லை. தனி நபரின் பட்டா நிலத்தில் சிலை வைக்கும் உரிமையை பறிக்க முடியாது என, ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுஉள்ளது.
நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நினைவு ஸ்துாபி அமைக்க அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

