/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் விசாரணை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் விசாரணை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் விசாரணை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் விசாரணை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஆக 31, 2025 07:22 AM
மதுரை:தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் நிதி முறைகேடு நடந்ததாக உள்நோக்கில் தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை ரூப்சிங் ராபின்சன் ராஜ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தை தேசிய மற்றும் தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்கள் செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்துதல், நிதியை பயன்படுத்துவதில் தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு 2019ல் புகார் அனுப்பினேன். விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்: முதற்கட்ட விசாரணை நடந்தது. மனுதாரரின் குற்றச்சாட்டு தெளிவற்றது; அவை உண்மையல்ல என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், 'சங்கத்தில் சுகாதாரத் துறையின் கீழ் மனுதாரர் பணிபுரிந்தார். பின் பணி நீக்கம் செய்யப்பட்டார். தவறான நோக்கில் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார்' என பதில் மனு தாக்கல் செய்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2019ல் பொது நல வழக்கை மனுதாரர் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை வாபஸ் பெற்றதால் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரரின் புகாரில் ஆதாரங்கள் இல்லை; தவறானது என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை முடித்து வைத்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட மனுதாரர் தற்போது உள்நோக்குடன் பொது நல வழக்கு தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

