/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழில் பழைய பாடத்திட்டம் தொடர வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
தமிழில் பழைய பாடத்திட்டம் தொடர வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தமிழில் பழைய பாடத்திட்டம் தொடர வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தமிழில் பழைய பாடத்திட்டம் தொடர வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஆக 03, 2025 05:01 AM
மதுரை : தமிழ் பாடத்தில் பழைய பாடத் திட்டம், தேர்வு முறையை பள்ளிகளில் பின்பற்ற தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
வாடிப்பட்டி ரஞ்சித்குமார் 2019 ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக பள்ளிகளில் 2019--20ம் கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி தமிழ் பாடத்தில் பழைய வினா- விடை அமைப்பு முறை முழுமையாக மாற்றப்பட்டது. கேள்விகள் எப்படி வேண்டுமானலும் கேட்கப்படும். புது முறையால் அரசு பள்ளிகளின் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
பிளஸ் 1, பிளஸ் 2வில் இருந்த தமிழ் இரண்டாம்தாள் நீக்கப்பட்டது. இது மாணவர்களின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும். அரசின் வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெற்றிபெற முடியாத நிலை ஏற்படும்.
சமச்சீர் கல்வி என்பது அனைவருக்கும் சமமான, எளிமையாக புரியும் கல்வித் திட்டமாக இருக்க வேண்டும். புது கல்வித் திட்டம் அவ்வாறு இல்லை. தமிழ் பாடத்தில் பழைய பாடத் திட்டம், பழைய வினா-விடை முறை மற்றும் தேர்வு முறையை வரும் கல்வி ஆண்டுகளிலும் பின்பற்ற வேண்டும். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் பாடத்தில் கடவுள் வாழ்த்து மீண்டும் இடம் பெற தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
முற்றிலும் தவறாக புரிந்து கொண்டு மனுவில் நிவாரணம் கோரப்பட்டுள்ளது. கால ஓட்டத்தில் அதன் தேவை இல்லாமல் போய்விட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.