/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மருந்து, மாத்திரைக்கு தனித்தனி கவர்கள் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
மருந்து, மாத்திரைக்கு தனித்தனி கவர்கள் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மருந்து, மாத்திரைக்கு தனித்தனி கவர்கள் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மருந்து, மாத்திரைக்கு தனித்தனி கவர்கள் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஜூலை 20, 2025 07:05 AM
மதுரை: ராமநாதபுரம் வெங்குளம் ராஜு. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள்இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் காலை, மதியம், இரவு, உணவிற்கு முன் மற்றும் பின் என தெளிவாக அச்சிட்டு, தனித்தனி கவர்களில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அதுபோல் அரசு மருத்துவமனைகளில் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தவறாக புரிந்து கொண்டு நிவாரணம் கோரியுள்ளார். மருந்துகளை பரிந்துரைப்பது மற்றும் அதன் பயன்பாடு குறித்து ரிட் மனுவில் உத்தரவு பிறப்பித்து ஒழுங்குபடுத்த முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.