sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஆக்கிரமிப்பை அகற்றும் அரசு நடவடிக்கை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் அபராதம்

/

 ஆக்கிரமிப்பை அகற்றும் அரசு நடவடிக்கை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் அபராதம்

 ஆக்கிரமிப்பை அகற்றும் அரசு நடவடிக்கை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் அபராதம்

 ஆக்கிரமிப்பை அகற்றும் அரசு நடவடிக்கை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் அபராதம்


ADDED : ஜன 15, 2026 07:20 AM

Google News

ADDED : ஜன 15, 2026 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ராமநாதபுரம் மாவட் டம் சாயல்குடியில், குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கு எதிராக அவரிடம் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை பரிசீலித்து, பைசல் செய்ய உத்தரவிடக்கோரி சாயல்குடி லட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.

அரசு வழக்கறிஞர் மகாராஜன்: ஆக்கிரமிப்பை அகற்றும் நோ ட்டீசிற்கு எதிராக மனுதாரர் தாக்கல் செய்த மற்றொரு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பிறகும் மனுதாரர் கலெக்டரிடம் மறு சீராய்வு மனு சமர்ப்பித்துள்ளார்.

நீதிபதிகள் உத்தரவு:

சம்பந்தப்பட்ட சொத்து மீதான தனது அத்துமீறிய ஆக்கிரமிப்பை பாதுகாப்பதற்காக, தந்திரமான வழியை மனுதாரர் கண்டுபிடித்துள்ளார். ஏற்கனவே வழக்கு தள்ளுபடியான பின், மறுசீராய்வு என்ற போர்வையில், கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அதை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

மனுதாரரின் இம்முயற்சி, சட்ட நடைமுறைகளை தெளிவாக தவறாக பயன்படுத்துவதாகும். மீண்டும் மீண்டும் ரிட் மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் அரசு, நீதிமன்றத்திற்கு மனுதாரர் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த 2023ல் மனுதாரரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துவங்கிய நடவடிக்கையை தடுக்க, தவறான நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட சட்டப் போராட்டம் இது.

மேலும் தொடராமல் தடுத்து நிறுத்த, மனுதாரருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இதை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால் தொகையை வசூலிக்க மனுதாரருக்கு எதிராக ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தர விட்டனர்.






      Dinamalar
      Follow us