/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மார்க்கெட் ஏலத்திற்கு பொது நல வழக்கு அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
/
மார்க்கெட் ஏலத்திற்கு பொது நல வழக்கு அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
மார்க்கெட் ஏலத்திற்கு பொது நல வழக்கு அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
மார்க்கெட் ஏலத்திற்கு பொது நல வழக்கு அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
ADDED : ஏப் 26, 2025 03:40 AM
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு பொது ஏலம் நடத்த தாக்கலான பொது நல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரூ.1000 அபராதம் விதித்தது.
மதுரை வேல்முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிலுள்ள ஒரு உருளைக்கிழங்கு கடை மற்றும் இதுபோன்ற பிற கடைகளுக்கு பொது ஏலம் நடத்தக்கோரி மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன்.
பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு:
உருளைக் கிழங்கு கடையை ஏலதாரர் சேர்மமணி என்பவர் நடத்துவதாக மாநகராட்சி தரப்பு தெரிவித்தது. இது மனுவில் குறிப்பிட்டுள்ள விபரம் சரியானதல்ல என்பதை குறிக்கிறது.ஏலதாரரோ அல்லது உள் குத்தகைதாரரோஅல்லாத மனுதாரர், பொது நல வழக்குமூலம் இங்கு வந்துள்ளது தெளிவாகிறது.
சேர்மமணி மற்றும் உள் குத்தகை பெற்றதாகக் கூறப்படும் முருகேசன் இடையேயான சிவில் வழக்கு மதுரை முன்சீப் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பொது நல வழக்கு என்ற போர்வையில் தாக்கல் செய்த இம்மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கிறோம். தொகையை உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

