/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹாக்கி சங்க தேர்தல் நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
ஹாக்கி சங்க தேர்தல் நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஹாக்கி சங்க தேர்தல் நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஹாக்கி சங்க தேர்தல் நடத்த வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : அக் 16, 2024 05:33 AM
மதுரை: 'ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு' சங்கத்திற்கு தேர்தல் நடத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி மாரீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
துாத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்க துணைத் தலைவராக உள்ளேன். இச்சங்கம் 'ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு' பெயரிலான சங்கத்தின் உறுப்பினர். இது சென்னை எழும்பூரில் உள்ளது. அரசிடம் பதிவு பெற்றது. சங்க செயற்குழு அல்லது பொதுக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் சில நிர்வாகிகள் வங்கியிலிருந்து ரூ.10 லட்சத்தை எடுத்தனர்.
அதை தவறாக பயன்படுத்தினர். இது அரசிடமிருந்து சங்க வளர்ச்சிக்காக பெறப்பட்ட தொகை. நிதி கையாடல் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதியப்பட்டது.
சங்கத்தின் தற்போதைய தலைவர், செயலாளர், பொருளாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். சுதந்திரமாக, வெளிப்படையாக தேர்தல் நடத்த வேண்டும். புது நிர்வாகிகளை தேர்வு செய்யும்வரை இடைக்காலமாக முன்னாள் ஹாக்கி ஒலிம்பிக் வீரர்கள் கொண்ட குழு மூலம் சங்கத்தை நிர்வகிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்ட பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.12க்கு ஒத்திவைத்தது.