/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அங்கீகாரமற்ற சர்ச் கட்டுமானம்; நீதிபதியின் ஆய்வறிக்கை தேவை
/
அங்கீகாரமற்ற சர்ச் கட்டுமானம்; நீதிபதியின் ஆய்வறிக்கை தேவை
அங்கீகாரமற்ற சர்ச் கட்டுமானம்; நீதிபதியின் ஆய்வறிக்கை தேவை
அங்கீகாரமற்ற சர்ச் கட்டுமானம்; நீதிபதியின் ஆய்வறிக்கை தேவை
ADDED : செப் 29, 2024 06:53 AM

மதுரை : துாத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக சர்ச் கட்டுமானம் மேற்கொள்வதாகவும், அகற்றக்கோரியும் தாக்கலான வழக்கில், தலைமை நீதித்துறை நடுவர் ஆய்வு செய்து அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் செம்மறிக்குளம் தனராஜ் தாக்கல் செய்த மனு: மெஞ்ஞானபுரம் மற்றும் மாணிக்கபுரத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் சி.எஸ்.ஐ.,சர்ச் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. கட்டட திட்ட வரைபட அனுமதியை உரிய அதிகாரிகளிடம் பெறவில்லை. பொது சாலையை ஆக்கிரமித்து, விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொள்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
கலெக்டர், திருச்செந்துார் ஆர்.டி.ஓ.,தாசில்தார், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் அனுப்பினோம். அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கீகாரமற்ற சட்டவிரோத கட்டுமானம் என எச்சரிக்கை விடுத்தனர். அதை மீறி கட்டுமானம் தொடர்கிறது. கட்டுமானத்தை அகற்றக்கோரி அனுப்பிய மனுவை அதிகாரிகள் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: கட்டுமான பணியை நிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: துாத்துக்குடி தலைமை நீதித்துறை நடுவர் (சி.ஜெ.எம்.,) சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து கட்டுமானத்தின் தற்போதைய நிலை குறித்து அக்.4 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.