/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சத்துணவு சமையல் உதவியாளர் பணி மாற்றுத்திறனாளிகள் விலக்கிற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
சத்துணவு சமையல் உதவியாளர் பணி மாற்றுத்திறனாளிகள் விலக்கிற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
சத்துணவு சமையல் உதவியாளர் பணி மாற்றுத்திறனாளிகள் விலக்கிற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
சத்துணவு சமையல் உதவியாளர் பணி மாற்றுத்திறனாளிகள் விலக்கிற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 29, 2025 05:22 AM
மதுரை : சத்துணவு சமையல் உதவியாளர் பணியில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது என அரசாணையில் குறிப்பிட்டுள்ளதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தாக்கல் செய்த பொதுநல மனு: சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 வது வகுப்பு தேர்ச்சி/தோல்வி என நிர்ணயிக்கப்படுகிறது. நியமிக்கப்படுவோரில் 12 மாதங்கள் திருப்தியாக பணியை முடிக்கும் தகுதியானவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் வழிகாட்டுதல்களை பின்பற்றி நியமனம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது என தமிழக சமூகநலத்துறை 2024 டிச.16 ல் அரசாணை வெளியிட்டது.
மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்தது சட்டவிரோதம். நியமனம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும். நியமனத்தில் சட்டப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: அரசாணையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது என்ற பகுதிக்கு மட்டும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சமூக நலத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை மார்ச் 26 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.

