sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அ.தி.மு.க.,பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு

/

அ.தி.மு.க.,பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க.,பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க.,பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மே 17, 2025 04:15 AM

Google News

ADDED : மே 17, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவியை தகுதி நீக்கம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தேரூர் தேவகுளம் ஐயப்பன் தாக்கல் செய்த மனு: தேரூர் பேரூராட்சி வார்டு 8 ல் கவுன்சிலராக (தி.மு.க.,) வெற்றி பெற்றேன். வார்டு 2ல் அமுதாராணி (அ.தி.மு.க.,) வெற்றி பெற்றார். பேரூராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு (பொது) ஒதுக்கப்பட்டது. அமுதாராணி தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் எனக்கூறி வேட்புமனு தாக்கல் செய்தார். தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பட்டியலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கும் வின்சென்ட் என்பவருக்கும் இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் கீழ் கிறிஸ்தவ சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி 2005 ல் திருமணம் நடந்தது. இதன்படி அமுதாராணி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. திருமணத்தின் போது கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.

அமுதாராணியை தகுதி நீக்கம் செய்யக்கோரி கன்னியாகுமரி கலெக்டர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், தேரூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு 2023 ல் மனு அனுப்பினேன். தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எல்.விக்டோரியா கவுரி: கிறிஸ்தவ சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்து கொண்டதன் மூலம், ஹிந்து பட்டியல் ஜாதி என்ற அடையாளத்தை அமுதாராணி துறந்து கிறிஸ்தவராக மாறியுள்ளார்.

தலைவர் பதவிக்கான வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது. மனு செய்த அன்றே நிராகரித்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் அதிகாரி ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொண்டது தெளிவாகிறது. மனு அனுமதிக்கப்படுகிறது. அமுதாராணியை தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து கலெக்டர் அறிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us