/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 11, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சிவா உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை அனுப்பானடியில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளது.
அகற்றக்கோரி மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: இவ்விஷயத்தில் தகுதிகளை நாங்கள் ஆராயவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
மனுவை பரிசீலித்து கமிஷனர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனரின் முடிவிற்கு விடப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.

