/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யுடியூபரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
/
யுடியூபரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
யுடியூபரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
யுடியூபரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 21, 2024 05:40 AM
மதுரை: தமிழக துணை முதல்வர் உதயநிதியை விமர்சித்து வெளியான வீடியோ பதிவு குறித்து விவாதம் நடத்தியதாக பதிவான வழக்கில் யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு உட்பட 2 பேர் முன்ஜாமின் கோரியதில் இருவரையும் கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைத்தளத்தில் துணை முதல்வர் உதயநிதி பற்றி கருத்து தெரிவித்தார். அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரது வீடியோ பதிவு குறித்து யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு, நாம் தமிழர் கட்சி நிர்வாகி களஞ்சியம் சமூக வலைத்தளத்தில் விவாதம் நடத்தினர். இருவர் மீதும் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இருவரும், 'இதுபோல் சமூக வலைத்தளத்தில் சிலர் விவாதங்கள் நடத்தியுள்ளனர். எங்கள் மீது அரசியல் உள்நோக்கில் வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்: மனுதாரர்களை ஜன.,3 வரை கைது செய்யக்கூடாது. போலீஸ் தரப்பில் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

