/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'அட்டாக்' பாண்டிக்கு பரோல் உயர் நீதிமன்றம் உத்தரவு
/
'அட்டாக்' பாண்டிக்கு பரோல் உயர் நீதிமன்றம் உத்தரவு
'அட்டாக்' பாண்டிக்கு பரோல் உயர் நீதிமன்றம் உத்தரவு
'அட்டாக்' பாண்டிக்கு பரோல் உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 10, 2025 02:18 AM
மதுரை:மதுரை கீரைத்துறை 'அட்டாக்' பாண்டி, கடந்த தி.மு.க., ஆட்சியில் வேளாண் விற்பனைக்குழு தலைவராக இருந்தவர். மதுரையில் ஒரு நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த, 'பொட்டு' சுரேஷ் மதுரையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கிலும், 'அட்டாக்' பாண்டி கைதானார். தற்போது, மதுரை மத்திய சிறையில் உள்ளார். அவரது மனைவி தயாள், 'என் இதய பாதிப்பிற்கு சிகிச்சை பெற வேண்டியுள்ளது. உடன் இருந்து கவனித்துக் கொள்ள கணவரின் உதவி தேவை. அவருக்கு, 30 நாட்கள் பரோல் விடுப்பு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு, 'அட்டாக் பாண்டிக்கு ஜன., 20 முதல் 30 வரை பரோல் அனுமதிக்கப்படுகிறது' என நேற்று உத்தரவிட்டது.

