sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிரசவ சிகிச்சையில் பெண் மரணம்; ரூ.15 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

பிரசவ சிகிச்சையில் பெண் மரணம்; ரூ.15 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரசவ சிகிச்சையில் பெண் மரணம்; ரூ.15 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரசவ சிகிச்சையில் பெண் மரணம்; ரூ.15 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மே 24, 2025 09:22 PM

Google News

ADDED : மே 24, 2025 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மைய பிரசவ சிகிச்சையில் தாய், குழந்தை இறந்ததில் மருத்துவ அலுவலர்களின் கவனக்குறைவிற்கு பொறுப்பேற்று ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கயத்தாறு அருகே கீழபாறைப்பட்டி முருகாம்பாள் தாக்கல் செய்த மனு:

எனது மகள் கவிதா 24. இவருக்கும் கூலித் தொழிலாளியான ராம்கிக்கும் 2021ல் திருமணம் நடந்தது. கவிதா கர்ப்பமுற்றார். அவருக்கு 2022 பிப்.,12ல் பிரசவ வலி ஏற்பட்டது. கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.

தொடர்ச்சியான ரத்தப்போக்கு காரணமாக கவிதாவின் உடல்நிலை மோசமடைந்தது. அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.

கவிதா மரணம், குழந்தை இறந்து பிறந்ததற்கு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தின் சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களின் கவனக்குறைவான சிகிச்சையே காரணம். ரூ. 50 லட்சம் இழப்பீடு கோரி தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர், துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.

அரசு தரப்பு: 'எதிர்பாராத மகப்பேறியல் சிக்கல் ஏற்பட்டது. முறையாக அனைத்து சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மருத்துவ அலுவலர்களின் கவனக்குறைவு எதுவும் இல்லை,' என தெரிவித்தது.

நீதிபதி: சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களின் கவனக்குறைவால் சம்பவம் நடந்துள்ளது. ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மனு பகுதியளவு அனுமதிக்கப்படுகிறது. மனுதாரருக்கு ரூ. 15 லட்சம் மற்றும் ரூ.25 ஆயிரம் செலவு தொகையை சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் வழங்க வேண்டும். உரிய விசாரணைக்குப் பின் ரூ.15 லட்சத்தை கடம்பூர் ஆரம்ப சுகாதார மையத்தின் சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us