sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 முதல்வர் அறிவித்தபடி கருணைப்பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா நிலுவை எத்தனை என உயர்நீதிமன்றம் கேள்வி

/

 முதல்வர் அறிவித்தபடி கருணைப்பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா நிலுவை எத்தனை என உயர்நீதிமன்றம் கேள்வி

 முதல்வர் அறிவித்தபடி கருணைப்பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா நிலுவை எத்தனை என உயர்நீதிமன்றம் கேள்வி

 முதல்வர் அறிவித்தபடி கருணைப்பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா நிலுவை எத்தனை என உயர்நீதிமன்றம் கேள்வி


ADDED : பிப் 26, 2026 06:21 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: முதல்வர், அமைச்சர்கள் அறிவித்தபடி கருணைப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா, அறிவித்தும் நிலுவையில் உள்ளவை எத்தனை என்ற விபரங்களை தமிழக அரசு தரப்பில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம் முடிவைத்தனேந்தல் ஜெயதுர்காவேணி தாக்கல் செய்த மனு: ஏரல் போலீசில் எஸ்.ஐ.,யாக எனது தந்தை பாலு பணிபுரிந்தார். இவர் 2021 பிப்.,1ல் வாகன சோதனையில் ஈடுபட்டார். மது போதையிலிருந்த முருகவேல் என்பவரை பாலு கண்டித்தார். ஆத்திரமடைந்த முருகவேல் சரக்கு வாகனத்தை மோதச் செய்து பாலுவை கொலை செய்தார்.

அப்போது தமிழக முதல்வராக இருந்த பழனிசாமி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு கருணைப் பணி நியமனம் வழங்க ப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் எனக்கு கருணைப் பணி வழங்கக் கோரி டி.ஜி.பி.,க்கு விண்ணப்பித்தேன். அவர்,'எனது குடும்பம் வறுமை நிலையில் இல்லை,' என 2023ல் நிராகரித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தேன்.

தனி நீதிபதி, 'மனுதாரர் திருமணம் ஆனவர். அவரது தாய் குடும்ப ஓய்வூதியம் பெறுகிறார். சகோதரர் அரசுப் பணியில் உள்ளார். கருணைப் பணி நியமனம் பெற மனுதாரருக்கு தகுதி இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டார்.

திருமணமான மகள் கருணைப் பணி நியமனம் பெற தகுதியுடையவர் என விதிகளில் உள்ளதை தனி நீதிபதி கருத்தில் கொள்ள தவறிவிட்டார். எனது சகோதரர் தனியாக வசித்து வருகிறார். எங்களுக்கு உதவவில்லை. நான் மற்றும் எனது தாய் வறுமை நிலையில் உள்ளோம். தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சீனியம் மாள் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் தந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழலில் கருணைப் பணி நியமனம் அறிவிக்கப்படுகிறது. பின் அறிவித்தை அரசு தரப்பில் மறந்துவிடுகின்றனர். இதுவரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அறிவித்தபடி கருணைப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா? அறிவித்தும் நிலுவையில் உள்ளவை எத்தனை, மனுதாரர் விவகாரத்தில் ஏற்கனவே முதல்வர் அறிவித்ததை தமிழக அரசு நிறைவேற்றுமா அல்லது மறுக்கப் போகிறதா என்பது குறித்து அரசு தரப்பில் நாளை (பிப்.,27) தெளிவுபடுத்த வேண்டும்.

தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us