/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊராட்சி அலுவலகம் அமைப்பதற்கு எதிராக வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

ADDED : அக் 08, 2024 04:52 AM
மதுரை, : திருமங்கலம் அருகே தாயனேரி கரிசல்பட்டியில் நெற்கதிர் உலர்த்தும் களத்தில் ஊராட்சி அலுவலக கட்டுமான பணிக்கு தடை கோரிய வழக்கில் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இக்கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனு: கிராமத்தின் மைய பகுதியில் ஏற்கனவே ஊராட்சி அலுவலகம் இருந்தது. அதை அகற்றிவிட்டனர். தற்போது நெற்கதிர் உலர்த்தும் களம் அமைந்துள்ள பகுதியில் ஊராட்சி அலுவலக கட்டுமானப் பணி நடக்கிறது. ஏற்கனவே அலுவலகம் இருந்த இடம் காலியாக உள்ளது. அங்கு அலுவலகம் அமைக்கலாம்.
நெற்கதிர் உலர்த்தும் களத்தில் அலுவலக கட்டுமானம் மேற்கொள்வதால் அறுவடையின்போது மாற்றுவழியின்றி விவசாயிகள் சிரமப்படுவர்.
கோயில் திருவிழா காலங்களில் இக்களத்தில் மக்கள் பூஜை செய்வர். கலெக்டர், திருமங்கலம் ஆர்.டி.ஓ.,வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினேன். அலுவலக கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், ஆர்.டி.ஓ., ஊராட்சி தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்.14 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.