/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கே.எல்.என்., பாலிடெக்னிக்கில் உயர்கல்வி வாய்ப்பு கண்காட்சி
/
கே.எல்.என்., பாலிடெக்னிக்கில் உயர்கல்வி வாய்ப்பு கண்காட்சி
கே.எல்.என்., பாலிடெக்னிக்கில் உயர்கல்வி வாய்ப்பு கண்காட்சி
கே.எல்.என்., பாலிடெக்னிக்கில் உயர்கல்வி வாய்ப்பு கண்காட்சி
ADDED : ஜன 28, 2025 05:43 AM
மதுரை: மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் ஜன. 30 வரை உயர்கல்வி வழிகாட்டி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடக்கிறது. ஜன.24ல் செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கண்காட்சியை 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயனுள்ளதாக ஏற்பாடு செய்துள்ளனர். சிவில், மெக்கானிக்கல், டிரிப்ள் இ, இ.சி.இ., கணினி, ஏ.ஐ., எம்.எல்., போன்ற படிப்புகள் குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.
மதுரை மெட்ரோ மாதிரி திட்டம், 3டி பிரின்டர், ஸ்மார்ட் ஹோம் சென்சார் கட்டுப்பாடு, ஆட்டோமேட்டிக் தெருவிளக்குகள், ப்ளுடூத் மூலம் கட்டுப்படுத்தும் ரோபோட்டிக் கார் சார்ந்த புதிய தொழில்நுட்பங்களின் மாதிரி வடிவம் மாணவர்களால் காட்சிப்படுத்தபடுகிறது. நிர்வாக குழு உறுப்பினர் முரளிதரன் பேசினார். முதல்வர் ஆனந்தன், துணை முதல்வர் சகாதேவன், பேராசிரியர்கள் உயர்கல்வி குறித்தும் சிறந்த கல்லுாரிகளில் சேருவதற்குரிய 'கட் ஆப்' மதிப்பெண்கள் குறித்து அறிவுறுத்தினர்.