ADDED : மே 14, 2026 03:43 AM
மதுரை: நெடுஞ்சாலைத் துறைகளின்மூலம் நடைபெறும் சாலைகள், பாலங்களின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய, நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையிலான உள்தணிக்கை குழு அமைக்கப்படும். இக்குழு மாவட்டங்களில் நடந்துள்ள பணிகளின் தரங்களை ஆய்வு செய்து மதிப்பீடு செய்யும்.
மதுரை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டம் சார்பில் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சேலம் நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம், பராமரிப்பு அலகு கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
எஸ்.அரசபட்டி சாலை, வத்தலக்குண்டு சாலை வரை மொத்தம் 11 கி.மீ., நீளத்திற்கு ரூ.10.60 கோடி செலவில் 3.75 மீ., அகலத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்தனர். சாலை பணித்தளத்தை அளந்தும், அதன் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு செய்தனர். இதில் கோட்டப் பொறியாளர்கள் முத்துக்குமரன், சந்திரசேகரன் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
