ADDED : ஜூலை 24, 2026 12:46 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: 'நீட்' தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நேற்றுமுன்தினம் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை சிலர் அழித்தனர்.
நேற்று பஸ் ஸ்டாண்ட் அருகே அக்ரஹாரம் சந்திப்பில் உள்ள போஸ்ட் ஆபீஸ் பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. அருகே சுவற்றில் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
