ADDED : மார் 16, 2026 05:44 AM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை சிலர் நேற்று காலை அழித்துவிட்டு தப்பினர்.
திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகைகளில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை மே 17 அமைப்பைச் சேர்ந்த குழுவினர் அழித்துவிட்டு ஓடியதாக நிலைய மேலாளர் ரயில்வே போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார். ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர். இது சம்பந்தமாக மூன்று பேர் மீது ரயில்வே சட்டப் பிரிவுகள் 147, 145பி, 166 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
