/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து மலையை பாதுகாக்க ஹிந்து அமைப்புகள் ஆலோசனை; நடவடிக்கை இல்லையெனில் கடையடைப்பு
/
குன்றத்து மலையை பாதுகாக்க ஹிந்து அமைப்புகள் ஆலோசனை; நடவடிக்கை இல்லையெனில் கடையடைப்பு
குன்றத்து மலையை பாதுகாக்க ஹிந்து அமைப்புகள் ஆலோசனை; நடவடிக்கை இல்லையெனில் கடையடைப்பு
குன்றத்து மலையை பாதுகாக்க ஹிந்து அமைப்புகள் ஆலோசனை; நடவடிக்கை இல்லையெனில் கடையடைப்பு
ADDED : ஜன 13, 2025 03:53 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க ஹிந்து இயக்கங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
'திருப்பரங்குன்றம் மலைப் பாதுகாப்பு இயக்கம்' சார்பில் நடந்த கூட்டத்தில், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார், அகில பாரத ஹிந்து மகா சபா மாநில தலைவர் கல்கி ராஜசேகர், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன், பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார், மண்டல் தலைவர் பாலகிருஷ்ணன், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம், மாவட்ட்த் தலைவர் சக்திவேல், ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கணேஷ் புலவர், அ.ம.மு.க., சரவணக்குமார், ஹிந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சோலை கண்ணன், ஹிந்து மகா சபா சஞ்சீவ், அகில பாரத ஹிந்து மகாசபை இளவரசன், வீர தமிழ் பேரவை அன்பு மணிகண்டன் பேசினர்.
கூட்டத்தில், ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு எனும் பெயர் பெற்ற திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். புனிதமான திருப்பரங்குன்றம் மலைமேல் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிடுவதை அரசு நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகளை மிரட்டி வன்முறையை துாண்டி பிரச்னையை உருவாக்கி வீண் சர்ச்சையை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலையில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வகையில் மலை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மலையில் உள்ள சமணர் படுக்கைகள், கல்வெட்டுகளை பாதுகாக்க மலை முழுவதையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை மாற்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்துக் கட்சி, அனைத்து சமூக மக்கள் ஒன்றிணைந்து திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.