ADDED : பிப் 03, 2026 06:39 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் ஹிந்து சமய ஒற்றுமைத் திருவிழா நடந்தது.
கிராமத்தினர், பூர்வீக குடியினர் சார்பில் நடந்த இவ்விழாவில் சபதம், வீரணன், பெருமாள், செல்வகுமார், கிருஷ்ணமூர்த்தி, கார்மேகம், மணிப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர். வழக்கறிஞர் முத்து ராமலிங்கம் பேசினார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பாதுகாப்பதற்கும், மாலிக்காப்பூர் படையெடுப்பில் இருந்து கோயிலை காப்பதற்காகவும், கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட குட்டியாபிள்ளை குறித்தும், மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றும் பிரச்னை, திருப்பரங்குன்றம் கோயில் வரலாறுகள் குறித்து ஆலோசித்தனர்.
கிரிவலம் செல்வதன் அவசியம், மலை உச்சியில் உள்ளது தீபத்துாண், அதில் முன்னோர் கார்த்திகை தீபம் ஏற்றியது, எதிர்காலத்தில் ஹிந்துக்களை ஒன்றிணைப்பது குறித்து பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
