ADDED : நவ 07, 2024 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: மதுரை வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி போட்டி வாடிப்பட்டியில் நடந்தது.
இதில் பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயது பிரிவு இறுதிப்போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் மதுரை திருநகர் இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளியை வென்றனர். பள்ளி கல்வித்துறை சார்பில் பிப்ரவரியில் சென்னையில் நடக்கும் மாநில போட்டிக்கு தேர்வாகினர். வெற்றிபெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ராஜா, செந்தில் குமார், சுரேஷ் ஆகியோரை தலைமை ஆசிரியர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.