/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹாக்கி: கப்பலுார் மாணவிகள் முதலிடம்
/
ஹாக்கி: கப்பலுார் மாணவிகள் முதலிடம்
ADDED : ஜன 22, 2024 05:22 AM

திருமங்கலம்: கப்பலுார் ஊராட்சி சார்பில் பள்ளி மாணவியர்களுக்கான முதலாம் ஆண்டு ஹாக்கி போட்டி மதுரை எல்லீஸ் நகர் மைதானத்தில் நடந்தது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில், வாடிப்பட்டி அரசு பள்ளி மாணவிகளை கப்பலுார் அரசு கள்ளர் பள்ளி மாணவிகள் வென்று முதலிடம் பெற்றனர்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் கண்ணன் போட்டியை துவக்கி வைத்தார். மாணவிகளை கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, உடற்கல்வி ஆய்வாளர் வினோத், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கப்பலுார் கள்ளர் பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா, உடற்கல்வி ஆசிரியர் நல்ல மாயன், ஹாக்கி பயிற்சியாளர் நடராஜன் உட்பட பலரும் பாராட்டினர்.