ADDED : ஏப் 18, 2025 06:28 AM

மதுரை: மதுரை ஞான ஒளிவுபுரம் சர்ச்சில் புனித வியாழனை முன்னிட்டு பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்வு நடந்தது.
இயேசு சிலுவையில் அறைந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் பாதிரியார் ஜோசப், உதவிப் பாதிரியார் மதியழகன் தேர்வு செய்யப்பட்ட 12 பேருடைய பாதங்களை கழுவி, முத்தமிட்டனர்.
பாஸ்டின் நகரில் பாதிரியார் ஜெயராஜ், அஞ்சல் நகரில் பாதிரியார் அருள்சேகர், டவுன் ஹால் ரோடு ஜெபமாலை சர்ச்சில் பாதிரியார் அமல்ராஜ் மற்றும் கீழவாசல் துாயமரியன்னை, புதுார் லுார்து அன்னை, ரயில்வே காலனி இருதய ஆண்டவர் உள்பட அனைத்து சர்ச்களிலும் வழிபாடு நடந்தது.
புனித வெள்ளியை முன்னிட்டு இன்று (ஏப்.18) காலை 6:00 முதல் மதியம் 3:00 மணி வரை அமைதி பிரார்த்தனை நடைபெறும். தொடர்ந்து மதியம் 3:00 மணிக்கு சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனையுடன் சர்ச் மூடப்படும். நாளை (ஏப்.19) இரவு 11:00 மணிக்கு ஈஸ்டர் சிறப்பு வழிபாடு நடக்கும்.

