ADDED : பிப் 24, 2026 06:09 AM
மதுரை: மதுரை ஊர்க்காவல் படை வட்டார தளபதி தெரிவித்துள்ளதாவது:
மதுரை நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவுப்படி நகர் ஊர்க்காவல் படை சார்பில் பிப்.,27ல் ஆயுதப்படை மைதானத்தில் ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.
சேவை மனப்பான்மை உள்ள 20 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் இதில் பங்கேற்கலாம். ஆண்களுக்கு 165 செ.மீ., பெண்களுக்கு 155 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். விளையாட்டு சான்றிதழ், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு முன்னுரிமை உண்டு.
விருப்பம் உள்ளவர்கள் தல்லாகுளம் கோகலே ரோட்டில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இன்று (பிப்.,24) காலை 10:00 முதல் பிப்.,26 இரவு 8:00 மணி வரை விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வுக்கு வரும்போது சான்றிதழ்கள் அசல், நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டையுடன் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
