ADDED : டிச 08, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி கலை கல்லுாரியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாட்ஷா, நடிகர் மதுரை முத்து, ஆனந்த் எக்ஸ்போர்ட் நிறுவன மேலாளர் ஆனந்த் கணேசன் பங்கேற்றனர். பாரா ஒலிம்பிக்கில் உலக சாதனை புரிந்த மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குழந்தைகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில் மாநில சாதனை புரிந்த குழந்தைகள், பெற்றோர் என 1500க்கும் மேற்பட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.
அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பாலகுருசாமி, அறங்காவலர்கள் சபரிமணிகண்டன், அமுத நிலவன் பங்கேற்றனர்.

