தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொடிமங்கலத்தில் 'கொடூர' பஸ் ஸ்டாப்

 கொடிமங்கலத்தில் 'கொடூர' பஸ் ஸ்டாப்

 கொடிமங்கலத்தில் 'கொடூர' பஸ் ஸ்டாப்


ADDED : மார் 10, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: திருப்பரங்குன்றம் ஒன்றியம் கொடிமங்கலம் ஊராட்சியில் பழுதடைந்த பஸ் ஸ்டாப்பை (பயணிகள் நிழற்குடை) தவிர்க்கும் பயணிகள் ரோட்டோரம் வெயில், மழையில் காத்திருக்கின்றனர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த பஸ் ஸ்டாப் பராமரிப்பின்றி சேதமடைய துவங்கியது. மது பிரியர்கள் 'பாராக' மாற்றினர். பராமரிப்பற்று சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன.

கட்டடத்தின் அனைத்து பக்கத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது பஸ்ஸ்டாப் சுவர்கள் போஸ்டர்கள் ஒட்டுவதற்காகவே பயன்படுகிறது. சிலமாதங்கள் முன்வரை நிழற்குடையின் படிக்கட்டுகளில் பஸ்சுக்கு காத்திருப்போர் அச்சத்துடன் அமர்ந்து வந்தனர். தற்போது சிலாப்புகளும் உதிர்ந்து விழத்துவங்கியதால் அருகே செல்லவே தயங்குகின்றனர்.

இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது நிழற்குடை கட்டுமானமே அதிர்கிறது. இதனால் பயணிகள் கட்டடம் அருகே செல்லாமல், தள்ளியே நின்று, வெயில், மழைக்கு சிரமப்படுகின்றனர். புதிய பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us