/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரயில் இயக்கம்
/
ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : ஆக 11, 2025 04:53 AM
மதுரை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி இடையே சிறப்பு ரயிலை தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆக., 14 மாலை 4:00 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07331), மறுநாள் காலை 11:00 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கத்தில் காரைக்குடியில் ஆக., 15 மாலை 6:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07332), மறுநாள் மதியம் 2:40 மணிக்கு ஹூப்ளி செல்லும்.
இவ்விரு ரயில்களும் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், கிருஷ்ணராஜபுரம், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வழியாக செல்லும். ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, ஒரு ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

