ADDED : மார் 14, 2024 04:03 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி வாஸன் கண் மருத்துவமனை சார்பில் மனிதநேய விருது வழங்குவது, மகளிர் தின விழாக்கள் நடந்தன. தமிழ்நாடு தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் கமல்பாபு தலைமை வகித்தார்.
பொது மேலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். டாக்டர் முருகலெட்சுமி, வரவேற்றார். மக்கள் சேவை செயும் பெண்கள், பெண்களால் இயக்கப்படும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 25 மகளிருக்கு மனிதநேய விருதுகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். மேற்கு மண்டலத் தலைவர் சுவிதா, கவுன்சிலர்கள் இந்திரா காந்தி,, விஜயா, சுவேதா, சிவா கலந்து கொண்டனர். மருத்துவமனை தென்மண்டல மார்கெட்டிங் அதிகாரி விஜயன் பிரான்ஸிஸ் ஏற்பாடுகளை செய்தார்.
