/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆதார் மையங்களில் குவிந்த நுாறுநாள் திட்டப் பணியாளர்கள்
/
ஆதார் மையங்களில் குவிந்த நுாறுநாள் திட்டப் பணியாளர்கள்
ஆதார் மையங்களில் குவிந்த நுாறுநாள் திட்டப் பணியாளர்கள்
ஆதார் மையங்களில் குவிந்த நுாறுநாள் திட்டப் பணியாளர்கள்
ADDED : அக் 16, 2025 05:17 AM
பேரையூர்: நுாறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு அதிகளவில் நடப்பதால் இத்திட்டப் பணியாளர்கள் பயோமெட்ரிக் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தில் பணிபுரிவோரின் கைரேகை, கருவிழி இயந்திரத்தில் பதிவாகவில்லை என்றால் ஆதார் மையத்தில் மீண்டும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அலுவலர்கள் அனைவரையும் ஆதார் மையங்களுக்கு சென்று ஆதாரில் கருவிழி, கைரேகையை மீண்டும் பதிவு செய்யும்படி தெரிவித்துள்ளனர்.
பேரையூர் தாலுகா அலுவலகம், அங்கன்வாடி மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்களில் ஆதார் மையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாளில் 50 பேருக்கு ஆதார் திருத்தம், புதுப்பித்தல் செய்ய முடியும். சாதாரண நாட்களிலேயே இம் மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். 100 நாள் திட்டப் பணியாளர்களும் திருத்தம் செய்வதற்காக ஆதார் மையங்களில் குவிந்து வருகின்றனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இப்பணியாளர்கள் கூறுகையில், ''ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கைரேகை வைத்தால் பதிவாகிறது. 100 நாள் திட்டப் பணியில் கைரேகை, கருவிழியை மாற்றினால்தான் உங்களுக்கு தொடர்ந்து வேலை தருவோம் எனக் கூறி அலைக்கழிக்கின்றனர். அதனால் இம்மையங்களில் திரண்டுள்ளோம்'' என்றனர்.