ADDED : டிச 27, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பிராமண சமூகத்துக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரி மதுரை பழங்காநத்தம் மைதானத்தில் 2025 ஜன., 5 ல் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கான கமிட்டி கூட்டம் நேற்று மதுரை தாம்பிராஸ் மண்டபத்தில் நடந்தது.
ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன் முன்னிலை வகித்தார். ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை சிறப்பாக நடத்தும் வகையில் அனைத்து தரப்பிலும் அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து சமுதாயத் தலைவர்கள், பிராமண சமூகத்தினர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.