/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியுடன் இணைய மறுத்து உண்ணாவிரதம்
/
மாநகராட்சியுடன் இணைய மறுத்து உண்ணாவிரதம்
ADDED : ஜன 13, 2025 04:15 AM
மதுரை : மதுரை ஒத்தக்கடை அருகே யா.நரசிங்கம், ஒத்தக்கடை, அரும்பனுார், கொடிக்குளம் ஊராட்சி மக்கள் மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மேற்கண்ட ஊராட்சிகளில் 15 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வூராட்சிகள் மாநகராட்சியுடன் இணையும் பட்சத்தில் 100 நாள் வேலைத் திட்டம் ரத்து, வீடு, குடிநீர், சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, ஊராட்சிக்கு கிடைக்கும் மத்திய அரசின் மானியங்கள் ரத்து உள்ளிட்ட காரணங்களால் எதிர்ப்பு தெரிவித்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
அவர்கள் கூறுகையில், ''மாநகராட்சியுடன் இணைப்பதால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். ஆண்டுக்கு இருமுறை வரி செலுத்த நேரிடும். 15 ஆண்டுக்கு முன்பு மாநகராட்சியுடன் இணைந்த மங்களகுடி, உத்தங்குடி, வண்டியூர் கிராமங்களின் நிலை தற்போதும் அப்படியே உள்ளது. எனவே ஊராட்சியாக தொடர விரும்புகிறோம். ஜன. 21ல் ஒத்தக்கடை பகுதிகளில் கடையடைப்பு நடத்தப்படும்'' என்றனர்.