திருப்பரங்குன்றத்தை மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி பிரசாரம்
திருப்பரங்குன்றத்தை மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி பிரசாரம்
ADDED : ஏப் 21, 2026 10:52 PM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கான ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இல்லத்தரசிகள் மின் சாதன பொருட்கள் பெற ரூ. 8,000க்கான சிறப்பு கூப்பன் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவது உட்பட ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வாக்குறுதிகளை முதல்வர் கொடுத்துள்ளார். தி.மு.க., ஆட்சியின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் அரசின் திட்டங்கள் பெறாத வீடுகளே இல்லை.
தற்போதைய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தொகுதி மக்களுக்கு எந்த திட்டங்களும் செய்யவில்லை. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை கூட மேம்படுத்தவில்லை. முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் 2.0 ஆட்சி மீண்டும் அமையும். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு சிறப்பு கவனம் எடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படும். முன்மாதிரி தொகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதி உருவாக்கப்படும்.
திருப்பரங்குன்றம் தொகுதி மேம்பாடு அடைய எனக்கு உதய சூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நான் வெற்றி பெற்றால் திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு காணப்படும் என்றார்.
