/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விடுபட்ட விவசாயிகளுக்கு அடையாள எண்
/
விடுபட்ட விவசாயிகளுக்கு அடையாள எண்
ADDED : டிச 13, 2025 06:06 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் பி.எச். கிசான் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறும் 11ஆயிரத்து 916 விவசாயிகள் அடையாள எண் பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும். மதுரையில் வேளாண், தோட்டக்கலைத் துறைகளின் கீழ் ஊக்கத்தொகை பெறும் 11ஆயிரத்து 916 விவசாயிகள் அடையாள எண் பெறாமல் விடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அடையாள எண் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் அல்லது தோட்டக்கலை அலுவலகங்களுக்குச் சென்று பதிவு செய்யாத விவசாயிகளின் ஊக்கத்தொகை நிறுத்தப்படும் என்றார்.

