/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருநகரில் குவியும் குப்பை கேட்டால் தினமும் ஒரு பதில்
/
திருநகரில் குவியும் குப்பை கேட்டால் தினமும் ஒரு பதில்
திருநகரில் குவியும் குப்பை கேட்டால் தினமும் ஒரு பதில்
திருநகரில் குவியும் குப்பை கேட்டால் தினமும் ஒரு பதில்
ADDED : நவ 05, 2025 12:42 AM
திருநகர்: மதுரை திருநகர் தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது.
திருநகரின் முக்கிய தெருக்களில் இரும்பு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஏராளமான பகுதிகளில் தெருக்களின் ஓரங்களில் குப்பை கொட்டப்படுகிறது.
அக்குப்பை நீண்ட நாட்களாக அகற்றப்படாததால் தொட்டிகள் நிரம்பி தரையில் வழிகிறது. மேலும் மேலும் கொட்டுவோர் ரோட்டிலேயே கொட்டிச் செல்கின்றனர்.
குப்பைத் தொட்டிகள் இல்லாத இடங்களில் வீடுகளின் அருகே குப்பை குவிந்து கிடக்கிறது. அழுகிய பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், நடந்து செல்வோர் மூக்கை பொத்தியபடிச் செல்லும் நிலை உள்ளது.
மந்தித்தோப்பு ரேஷன் கடை அருகே 20 நாட்களுக்கும் மேலாக குவிந்து கிடுக்கும் குப்பையால் பொருட்கள் வாங்க வருவோர் அவதிப்படுகின்றனர்.
குப்பைக்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
கவுன்சிலர் சுவேதா கூறுகையில், ''ஒப்பந்ததாரரிடம் கேட்டால் தினமும் ஒரு பதில் கூறுகிறார். குப்பை பிரச்னை குறித்து கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன்'' என்றார்.

