தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இக்னோ பட்டமளிப்பு விழா

 இக்னோ பட்டமளிப்பு விழா

 இக்னோ பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 07, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை (இக்னோ) மண்டல மையத்தில், 39வது பட்டமளிப்பு விழா நடந்தது. மூத்த மண்டல இயக்குநர் சண்முகம் வரவேற்றார்.

திண்டுக்கல் காந்தி கிராம ஊரக கல்வி நிறுவன துணைவேந்தர் பஞ்சநதம், மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: குறைந்த செலவில் தரமான உயர்கல்வியை இக்னோ வழங்குகிறது. நாட்டின் மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பயில்கின்றனர். செல்வத்தை விட கல்வியே சிறந்தது. அனைத்தும் அறிந்தவர் யாருமில்லை. எனவே வாழ்வில் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அறிவுசார் கல்வியுடன் திறன் சார்ந்த கல்வியும் அவசியம் என்றார்.

57 மாணவர்கள் பட்டம் பெற்றனர். மண்டல மைய துணை இயக்குநர் விஜயராகவன், உதவி இயக்குநர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். நாட்டின் 56 மண்டல மையங்களில் பட்டமளிப்பு விழா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us