ADDED : ஏப் 28, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: துளிர் அறிவியல் மையம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருமங்கலம் கிளை, இந்தியன் நோய் எதிர்ப்பியல் அமைப்பு சார்பாக சர்வதேச நோய் எதிர்ப்பு தினம் நேற்று மைக்குடி கிராமத்தில் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க திருமங்கலம் கிளைத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். துளிர் அறிவியல் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஷ் வரவேற்றார். மூளை மற்றும் நோய் எதிர்ப்பியல் குறித்து மனோதத்துவ இயல் நிபுணர் ராஜ சவுந்தர பாண்டியன், சித்த மருத்துவர் லாரியன் சகாய லிபியா, நோய் எதிர்ப்பியல் துறை டாக்டர் ஷாம் எபினேசர் பேசினர்.
நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து நோய் எதிர்ப்பியல் கழகத்தின் விக்னேஷ் சவுந்தர்ராஜன், அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வி பேசினர். துளிர் இல்ல பொறுப்பாளர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

