/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் 'அடிமாடாக' சென்ற 20 மாடுகள் மீட்பு; நெரிசலில் சிக்கி ஒரு மாடு பலி

ADDED : செப் 25, 2024 04:17 AM

மதுரை : மதுரையில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு 'அடிமாடாக' அடைத்து செல்லப்பட்ட 20 மாடுகள் மீட்கப்பட்டன. அதில் ஒன்று நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மாட்டுச்சந்தை நடக்கும். இங்கிருந்து வாரந்தோறும் 'வளர்ப்பதாக' கூறி மாடுகள், கன்றுகளை இறைச்சிக்காக வாங்கிச்செல்வது தொடர்கிறது. நேற்று அப்துல், ஈஸ்வரன் என்பவர்கள் மினி சரக்கு வேனில் 20 மாடுகள், கன்றுகளை 'பொதி மூடைகளாக' அடைத்து விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு 'வளர்ப்பதற்காக' கொண்டு சென்றனர்.
துவரிமான் நான்குவழிச்சாலை சந்திப்பில் ஹிந்து முன்னணி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பாலா, சக்திவேல் உள்ளிட்டோர் வழிமறித்து விசாரித்தனர். 'அடிமாடுகளாக' கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. அதில் ஒன்று நெரிசலில் சிக்கி இறந்து கிடந்தது. எஞ்சிய 19 மாடுகளை மீட்டு நாகமலை புதுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடக்கிறது.