/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சியம்மன் கோவிலில் 29 பேர் போலி கல்வி சான்றில் பணி நியமனம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க ஆயத்தம்

ADDED : நவ 27, 2024 02:08 AM
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலி கல்விச்சான்று கொடுத்து பணிபுரியும், 29 பேரை, 'சஸ்பெண்ட்' செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
இக்கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். பள்ளி கல்விச்சான்று அடிப்படையில் இவர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.
இதில், சேவுகர் பணியில் இருந்த ஒருவரின் பத்தாம் வகுப்பு கல்விச்சான்று போலி என தெரியவந்ததை தொடர்ந்து, அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதுபோல் மேலும் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, பணியில் சேர்ந்த அனைவரின் கல்விச்சான்றுகளின் உண்மை தன்மையை கண்டறிய குழு அமைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்டோரின் இருப்பிடம், படித்த பள்ளிக்கு சென்று விசாரித்ததில், 36 பேர் கல்விச்சான்றுகளில் குளறுபடி இருப்பது உறுதியானது.
அவர்களிடம் கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதில், 7 பேர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இருந்ததால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை காரணமாக வைத்து மற்ற 29 பேரும் தொடர்ந்து கோவில் பணியில் இருந்து வருகின்றனர்.
போலி கல்விச்சான்று சர்ச்சையில் சிக்கிய ஒருவர் பணியின் போது இறந்தார்.
அவரது மகன் வாரிசு வேலை கேட்டு கோவில் நிர்வாகத்திடம் விண்ணப்பித்த போது, அதிகாரிகள், 'எப்படி வாரிசு வேலை வழங்க முடியும்' என கேள்வி எழுப்பி, மனுவை கிடப்பில் போட்டு உள்ளனர்.
இதனால் வாரிசு வேலை கேட்டவர், நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளார்.
விசாரணையின் போது போலி கல்விச்சான்று கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, நீதிமன்றம் கேட்கக்கூடும் என்பதால், 29 பேரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளை துவக்கியுள்ளது.