ADDED : மார் 17, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு அருகே முடுவார்பட்டி ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை தொட்டி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டட திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் திறந்து வைத்தார்.
மாவட்ட தி.மு.க., அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணை தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் ஜெயமணி வரவேற்றார். யூனியன் பி.டி.ஓ.க்கள் கலைச்செல்வி, பிரேமராஜன் அலங்காநல்லுார் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணை தலைவர் சுவாமிநாதன், கவுன்சிலர் கோவிந்தராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

