/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு துவக்கம்
/
மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு துவக்கம்
ADDED : நவ 25, 2024 05:20 AM
மதுரை : மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு நேற்று (நவ.24) துவங்கியது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் நரசிம்மன், கவுன்சிலர் ஜென்னியாம்மாள், உறுப்பினர்கள் பாவேல் சிங்கன், மோகன் தலைமை வகித்தனர். முன்னதாக தொண்டர்களின் அணிவகுப்பு நடந்தது. நிர்வாகி பழனி கொடியேற்றினார். பகுதிச் செயலாளர் கோட்டைச்சாமி வரவேற்றார்.
மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன் எம்.பி., கண்ணன் பேசினர்.மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் தீர்மானங்களை நிறைவேற்றினார்.
மதுரையில் புதிய தொழிற்சாலைகள், ஐ.டி., நிறுவனங்களை அமைத்தல், கல்வி நிறுவனங்கள் அருகே போதை பொருள் விற்பனையை தடுத்தல், கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுத்து துார்வார வேண்டும், கூடல்நகரில் 2வது ரயில் முனையம், எய்ம்ஸ் பணியை துரிதப்படுத்துதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதிச் செயலாளர் பாலு நன்றி கூறினார்.