/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆக்டோ-ஜியோ முடிவு
/
காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆக்டோ-ஜியோ முடிவு
ADDED : ஜன 11, 2026 06:01 AM
மதுரை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை ஒருங் கிணைத்து கூட்டமைப்பு உருவாக்கும் கூட்டம் மதுரையில் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் நல்லதம்பி, பழைய ஓய்வூதியத் திட்ட மீட்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ், அனைத்து மகளிர் ஆசிரியர் சங்க நிறுவனர் இந்திரா உள்ளிட்ட 25 சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்க பொதுச்செயலார் பால சுப்ரமணியன் பேசினார்.
இக்கூட்டமைப்பு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங் களின் நடவடிக்கைக் குழு 'ஆக்டோ-ஜியோ' பெயரில் செயல்படும். துறைவாரியாக கோரிக்கைகளை ஒருங்கிணைத்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஜன.,31ல் சென்னையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடை பெறும். பிப்.,3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்குச் செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

