தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்

மதுரையில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்

மதுரையில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்


UPDATED : ஆக 16, 2026 07:33 PM

ADDED : ஆக 16, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 07:33 PM ADDED : ஆக 16, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி, கல்லுாரி

மதுரை கூடல்நகர் ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மதுரை காமராஜ் பல்கலை இயற்பியல் துறைத் தலைவர் அனிதா கொடியேற்றினார். முதல்வர் தங்கமுனியாண்டி, துணை முதல்வர் சவுந்தர்யா, பள்ளி நிர்வாகிகள் தேவன்குமார், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.இ., பள்ளியில் சுகாதாரத்துறை அலுவலர் பொற்செல்வம் கொடியேற்றினார். முதல்வர் லதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

மதுரை எஸ்.பி.ஜே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன் கொடியேற்றினார். தலைமையாசிரியர் அபர்ணா, பள்ளிச் செயலாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் துரைராஜ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் காசிராஜன் கொடியேற்றினார். பள்ளித் தலைவர் தர்மராஜ், தாளாளர் ஆனந்தகிருஷ்ணன், நிர்வாகிகள் சோமசுந்தரம், பாலாஜி, குமார் பங்கேற்றனர்.

பொது எல்லீஸ் நகர் ஜூபிடர் குடியிருப்போர் சங்கத்தில் துணைத் தலைவர் ஈஸ்வரபிரசாத் கொடியேற்றினார். தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். அவனியாபுரம் பெரியசாமி நகர், திருப்பதி நகர் குடியிருப்போர் சங்கத்தில் கவுரவத் தலைவர் குருசாமி கொடியேற்றினார். தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் அழகுராஜா, சூரியராஜன் பங்கேற்றனர்.

ஒத்தக்கடை வேலம்மாள் நகர் குடியிருப்போர் சங்கத்தில் தலைவர் துரைசாமி கொடியேற்றினார். மதுரை கலைநகர் விரிவாக்கம், பல்லவி நகர் குடியிருப்போர் சங்கத்தில் துணைத்தலைவர் பால்பேரின்பநாதன் கொடியேற்றினார். சங்க நிர்வாகிகள் குமரகுருபரன், பாலசிவா, பார்த்திபன், சேகர், பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us