ADDED : ஆக 16, 2026 01:23 AM

மதுரை: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தேசிய கொடியேற்றி ரூ.48.62 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினார். தியாகிகளை கவுரவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உட்பட அரசு துறைகள் சார்பில் 37 பயனாளிகளுக்கு ரூ. 48.62 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 230 பேருக்கு பாராட்டு சான்று, கேடயம் வழங்கினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ.,க்கள் கல்லாணை, கோபிசன், தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், டி.ஐ.ஜி., அபினவ் குமார், எஸ்.பி., தேவநாதன், டி.ஆர்.ஓ., அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி, கல்லுாரி மதுரை அருப்புக்கோட்டை ரோடு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி கொடியேற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் முதல்வர் சுஜாதா கொடியேற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குநர் பாண்டியராஜன் ஏற்பாடுகளை செய்தார். ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் கல்லுாரியில் முதல்வர் பாலன் கொடியேற்றினார்.
மதுரை அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியில் 100 அடி உயரமுள்ள தேசியக்கொடியை நிர்வாக இயக்குநர் அபிலாஷ் ஏற்றினார். முதல்வர் ஜெயலட்சுமி, மூத்த முதல்வர் ஞானசுந்தரி, பள்ளி நிர்வாகி நிக்கிபுளோரா பங்கேற்றனர். அரோபனா இந்தியன் பள்ளியில் பள்ளி நிர்வாக இயக்குநர் அபிலாஷ் கொடியேற்றினார். நிர்வாகிகள் நிக்கி புளோரா, கிறிஸ்டிலா சைலஸ் பங்கேற்றனர்.
பெருங்குடி அமுதம் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஜெயஷீலா கொடியேற்றினார். துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி ஏற்பாடுகளை செய்தார்.
எஸ்.எஸ்.காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியை ஜெயஸ்ரீ தலைமையில் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிறுவனர் கர்ணன் கொடியேற்றினார். மதுரைக் கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமையாசிரியர் வெங்கடசுப்பிரமணியன் கொடியேற்றினார்.
பள்ளி தலைவர் சங்கரன், செயலர் பார்த்தசாரதி, ஏ.பி.சி., அகாடமி முதல்வர் காளிதாஸ், தலைமையாசிரியர் பாலாஜிராம், ஏ.ஐ.ஏ., மேலாளர் ஜெயச்சந்திரன், உதவி தலைமையாசிரியர் மகேஸ்வரன் பங்கேற்றனர்.
தனக்கன்குளம் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் கொடியேற்றினார். த.வெ.க., மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் மருது பாண்டியன், தனக்கன்குளம் புவனேஸ்வரி மில்ஸ் உரிமையாளர் ரமேஷ், ஆசிரியைகள் லதா தேவி, பாரதி பங்கேற்றனர். மதுரை எல்.கே.பி., நகர் அரசு பள்ளியில் தலைமையாசிரியர் தென்னவன் கொடியேற்றினார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் நாகலட்சுமி, ஆசிரியை விஜயலட்சுமி, சித்ரா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் தஸ்லிம் பானு, புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் வீரலட்சுமி, ஆசிரியர் ராஜ வடிவேல் பங்கேற்றனர்.
மதுரை திருஞானம் துவக்க பள்ளியில் பள்ளி செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ் கொடியேற்றினார். பொதுச் செயலாளர் ராஜேஷ் கண்ணன், தலைமை ஆசிரியர் சரவணன், நிர்வாகிகள் சண்முகநாதன், ஜெயராஜ், பிரபு, ரவிந்திரன், விஜயன் பங்கேற்றனர். பழங்காநத்தம் ஆர்.சி., தொடக்கப்பள்ளி, ஆர்.சி., உயர்நிலைப்பள்ளி, செயின்ட் ஆன்டனிஸ் நர்சரி பள்ளி விழாவில் ஆசிரியை லீமா கொடியேற்றினார். தாளாளர் சேவியராஜ், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜார்ஜ் ஹூயூபர்ட், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சாய லீனுாஸ், உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகர் பங்கேற்றனர்.
மை மதுரை மாண்டிசோரி பள்ளியில் சின்னத்துரை, மகாலட்சுமி, முத்துலட்சுமி, பட்டிமன்ற பேச்சாளர் ஹரி பாலகிருஷ்ணன் கொடியேற்றினர். தாளாளர் கீதா கண்ணன், முதல்வர் அபராஜிதா, இயக்குநர் கண்ணன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆழ்வார்புரம் சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளியில் தாளாளர் சரவணன், தலைமையாசிரியர் மணிமேகலை, டாக்டர் அரவிந்தன், நண்பர்கள் அமைப்பின் தலைவர் செந்தில்குமார், முத்துமாரி, சந்தனபிரியா பங்கேற்றனர்.
உத்தங்குடி மகாஜன வித்யாலயா பள்ளியில் முதல்வர் இந்திராணி தலைமையில் தாளாளர் சுரேஷ்பாபு கொடி ஏற்றினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியைகள் மாரி மகேஸ்வரி, மணிமேகலை விழாவை ஒருங்கிணைத்தனர்.
மதுரை நவபத்கானா தெரு சவுராஷ்டிரா துவக்கப்பள்ளியில் சவுராஷ்டிரா பெண்கள் வித்யா சங்க நிர்வாகி ேஷாபனா தலைமையில் ஆலவாய் லயன்ஸ் சங்கத் தலைவர் விஜய் கொடி ஏற்றினார்.
தலைமையாசிரியர் சுபாஷினி வரவேற்றார். சங்க இணைச் செயலாளர் முத்துராஜூ மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். நிர்வாகிகள் ஜனார்த்தனன், சுந்தரராஜன், கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் முத்தையா கொடியேற்றினார். சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி, லேடிடோக் கல்லுாரி, அன்னை பாத்திமா கல்லுாரி, அருளானந்தர் உள்ளிட்ட கல்லுாரி நாட்டுப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பி.பி. குளம் தனபால் பள்ளியில் தாளாளர் தனபால் ஜெயராஜ் கொடியேற்றினார். தலைமையாசிரியர் தினேஷ் சேவியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
புதுார் அல்அமீன் பள்ளியில் எம்.எல்.ஏ., கல்லாணை கொடியேற்றினார். தாளாளர் முகமது இதிரிஸ், தலைமையாசிரியர் ஷேக் நபி, உதவித்தலைமையாசிரியர்கள் முகமது ரபி, அல்ஹாஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
யாதவர் கல்லுாரியில் முதல்வர் ராஜூ கொடியேற்றினார். துணை முதல்வர் கிருஷ்ணவேணி, கல்லுாரி நிர்வாகிகள் பரந்தாமன், அழகப்பன், பாலசுப்பிரமணியம், ராஜகோபால், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
நாகமலை புதுக்கோட்டை விசா பள்ளியில் வேளாண் உணவு வர்த்தக மைய நிறுவனர் ரத்தினவேல் கொடியேற்றினார். முதல்வர் சிவரஞ்சனி, நிர்வாகிகள் சுபப்பிரியா, துரை பாண்டி, பிருந்தா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். வண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியரால் கொடியேற்றப்பட்டது.
அத்திப்பட்டி ராமையா நாடார் பள்ளியில் துணைத் தலைவர் ராஜசேகரன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் முத்தழகு, நிர்வாகி மாரியப்பன், அத்திபட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் செல்லப்பா, கிராம கல்விக் குழுத் தலைவர் சவுந்தர பாண்டியன் பங்கேற்றனர்.
மெட்ரிக் பள்ளியில் பொருளாளர் மனோகரன் கொடியேற்றினார். தலைவர் கிருபாநிதி, செயலாளர் மாரியப்பன், முதல்வர் கற்பகமலர் பங்கேற்றனர்.
லேடிடோக் கல்லுாரியில் பொருளாதாரத்துறைத் தலைவர் ஹெலன் மேரிஜாக்குலின் கொடியேற்றினார். முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். அமெரிக்கன் கல்லுாரியில் முதல்வர் பால் ஜெயகர் கொடியேற்றினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கருமாத்துார் செயின்ட் கிளாரட் பள்ளியில் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் பிரசாத் கொடியேற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பொது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிர்வாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கொடியேற்றினார். ரத்ததான முகாம், கலை நிகழ்ச்சி, சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் சாகசக நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி எம்.சாய்சரவணன் கொடி ஏற்றினார். மாவட்ட மைய நுாலகத்தில் மாவட்ட நுாலகர் பழனிச்சாமி கொடியேற்றினார். வாசகர் வட்ட தலைவர் சபரி, முதன்மை நுாலகர் நித்தியானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர். வழிகாட்டி மணிகண்டன் நுாலகத்திற்கு 10 இருக்கைகள்வழங்கினார்.
அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குநர் சரவணன் கொடியேற்றினார். ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. பொது மேலாளர் கோபால கிருஷ்ணன், மண்டல பொது மேலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நரிமேடு சிங்கராயர் காலனி குடியிருப்போர் சங்கம் சார்பில் தலைவர் சென்ராயன் கொடியேற்றினார். ஆடிட்டர் சங்கரநாராயணன், செயலாளர் சையது அப்துல் காதர், பொருளாளர் பத்மநாபன், துணைத் தலைவர்கள் அதிபதி, மனோராஜன், செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், நிர்வாகிகள் சேகர், போஸ், ராமமூர்த்தி பங்கேற்றனர். விஸ்வநாதபுரம் குடியிருப்போர் சங்கம் சார்பில் தலைவர் பாலு தலைமையில் உதவிச் செயலாளர் சீத்தாராமன் கொடியேற்றினார்.
மதுரை சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் வேதவல்லி கொடியேற்றினார். தலைவர் சிவபாலன், துணைத் தலைவர் கருப்பசாமி, நிர்வாகி சம்பத், செயலாளர் கதிரேசன், கவுன்சிலர் சையது அபுதாஹீர் பங்கேற்றனர்.
காந்தி மியூசியத்தில் பொருளாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். செயலாளர் நந்தாராவ், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், மியூசிய உறுப்பினர் முரளி கிருஷ்ணன், காந்திய சிந்தனை கல்லுாரி முதல்வர் சேது ராக்காயி, ரோட்டரி மல்லிகை முத்து லட்சுமி, ரோட்டரி ஜல்லிக்கட்டு நெல்லை பாலு, வழக்கறிஞர் ராமநாதன் பங்கேற்றனர்.
மகபூப்பாளையம் தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் நிர்வாக இயக்குநர் வாசிமலை கொடியேற்றினார். மூத்த திட்ட நிர்வாகி கார்த்திகேயன், நேப்கிசான் நிதி நிறுவன துணை தலைமை நிதி அலுவலர் சுரேஷ் ராமலிங்கம், நகர்புற மண்டல வட்டார களஞ்சியம் தெய்வானை, குண்டாறு வயலக மண்டல செயலாளர் கோபால கிருஷ்ணன், களஞ்சிய மூத்த திட்ட தலைவர் நகுவீர் பிரகாஷ், நிர்வாகி விஜயகுமார் பங்கேற்றனர். தொழில்வர்த்தக சங்கத்தில் தலைவர் ஜெகதீசன் கொடியேற்றினார். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மதுரை தேனி ஆனந்தம் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் கிளையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நிர்வாக இயக்குநர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மதிச்சியம் இன்ஸ்பெக்டர் அனுராதா, சிங்கப்பெண் அதிரடி படை எஸ்.ஐ., நித்யா பங்கேற்றனர். மதுரை கிழக்கு கல்வி வட்டாரவள மையத்தில் மேற் பார்வையாளர் மஞ்சுளா தேவி தேசிய கொடியேற்றினார்.
மதுரை நகர் காங்., சார்பில் கட்சி அலுவலகத்தில் தலைவர் நல்லமணி கொடியேற்றினார். கவுன்சிலர்கள் கார்த்திகேயன், முருகன், போஸ், மாவட்டத் துணைத் தலைவர்கள் செய்யதுபாபு, மருதராஜ், பிள்ளப்பன், பாலு பங்கேற்றனர்.
ஆனையூர் மஸ்ஜிதே இப்ராகிம் ஜும்மா பள்ளிவாசலில் முன்னாள் ராணுவ சுபேதார் ஷேர் அலிகான் கொடியேற்றினார். பாபுஜி தலைமை வகித்தார். நிர்வாகிகள் முகமது இப்ராகிம், நாசர் உசேன், சர்தார். நூர்தீன், பேஸ் இமாம் முகமது கரீம், சகுபர் சாதிக், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். மதுரை செயின்ட் ஜார்ஜ் சர்ச் வளாகத்தில் செயலர் ஆசிர்வாதம் கொடியேற்றினார். நடிகர்கள் விக்டர், திருநாவுக்கரசு, திருஞானம், சார்லஸ், தாமஸ் தங்கதுரை கலந்துகொண்டனர்.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் துணைமேயர் நாகராஜன் கொடியேற்றினார். கமிஷனர் கவுரவ்குமார், எம்.எல்.ஏ., கார்த்திகேயன், துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி பங்கேற்றனர். அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் டீன் அருள் சுந்தரேஷ்குமார் கொடியேற்றினார். செவிலியர் பள்ளி, கல்லுாரி முதல்வர், மருத்துவக் கல்லுாரி துணைமுதல்வர், நிலைய மருத்துவ அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் நடந்த பொது விருந்தில் இணை கமிஷனர் ஹரிஹரன், கண்காணிப்பாளர்கள் பால லட்சுமி, ரம்யா சுபாஷினி, பி.ஆர்.ஓ., முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை வேளாண் உணவு வர்த்தக மையத்தில் செயல் இயக்குநர் சுரேஷ்குமார் கொடியேற்றினார். பணியாளர்கள் பங்கேற்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை தெற்கு மாவட்ட கிளை சார்பில் தலைவர் அப்துல் காதர் ஆலிம் கொடியேற்றினார். மாவட்ட பொருளாளர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் இக்பால் பாஷா, ஜாகிர் உசேன், சாகுல் ஹமீது, பஷீர் அகமது, ஆரிப் மவுலானா அஜிசுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை கோமதிபுரத்தில் சங்கத்தலைவர் ராகவன் கொடியேற்றினார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ தலைமை மருத்துவர் பத்ரி நாராயணன், சங்க நிர்வாகிகள் சேது ராம், ரகுபதி, காசி, திரவியம், சங்கர், காளிமுத்து, ஹரி பாஸ்கர், அபுபக்கர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தில் மாநிலத் தலைவர் திருமுருகன் கொடியேற்றினார். நிர்வாகிகள் விஜயன், செல்வம், பால்கனி, கார்த்திகேயன், ராஜராஜன், முத்துராமன், அறிவுமணி, பழனிகுமார் பங்கேற்றனர். ரத்ததான முகாம், கண் மருத்துவப் பரிசோதனை முகாம் நடந்தது. தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சங்கம் சார்பில் பழங்காநத்தம் வீரவாஞ்சிநாதன் கிளையில் மீனாட்சி பட்டாபிராமன் கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, சாம்பசிவம், சுப்ரமணியன் குழந்தைசாமி, விஸ்வநாதன், முத்துக்கிருஷ்ணன், உமா, சீனிவாசன், வெங்கடேசன், ஆடிட்டர் சுந்தர், விஜயராகவன், புஷ்பா, சுந்தரம், ராஜகோபாலன் பங்கேற்றனர். ஜெய்ஹிந்த்புரம் கிளையில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார்.
நிர்வாகிகள் ஜெகந்நாதன், ராஜம் மீனாட்சி, மீனாட்சி சுந்தரம், வெங்கட்ராமன், கல்யாணி, பால சுப்பிரமணியன், உமா, சித்ரா, பிச்சுமணி, சித்ரா பங்கேற்றனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் 'மாற்றம் தேடி' சமூக நல அறக்கட்டளை சார்பில் நிறுவனர் பாலமுருகன் ரத்த தானம் செய்தார். செல்லுார் கண்மாய்க்கரையில், செல்லுார் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் மக்கள் சட்ட உரிமை இயக்க தலைவர் அண்ணாதுரை, செல்லுார் கண்மாய் நீர் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் சங்கரபாண்டியன், வீரமணி, கரிகாலன், அழகுதனராஜ் கண்ணன், பொன்ராஜ், ரவிச்சந்திரன் பங்கேற்றனர். மூன்றாம் பார்வை அறக்கட்டளை சார்பில் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் சுதந்திர தின விழா நடந்தது.
இமேஜ் பெண்கள் சங்க தலைவர் வனிதா, கவிஞர். இரா. ரவி, சிங்கராயர் காலனி மக்கள் பங்கேற்றனர். மதுரை கே.கே. நகர், நியு எல்.ஐ.ஜி., காலனியில் சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியன் கொடி ஏற்றினார். கவுன்சிலர் மாலதி, சுல்தான், அன்பழகன் பங்கேற்றனர்.
பொன்மேனி சவுரப்பியா அப்பார்ட்மென்டில் பேராசிரியர் ராமமூர்த்தி கொடியேற்றினார். தலைவர் தங்கத்துரை, செல்வராஜ், குடியிருப்போர் கலந்து கொண்டனர். இரணியம் ஊராட்சி ஜாங்கிட் நகர் நலச்சங்கம் சார்பில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சுப்பாரெட்டி கொடியேற்றினார். தலைவர் மருதமுத்து, நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜ கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கோயிலில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடந்தது. முதியோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் தென்னக ரயில்வே மதுரை கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவசுந்தரம் தலைமையில் நிலைய மேலாளர் வினோத்குமார் கொடியேற்றினார். நிலைய மேலாளர் இமான்சூ, பொறியாளர் சந்திர கணேஷ், பணியாளர்கள் காண்டிபன், சுதாமா, பிஷ்ணுசிங், கோட்டீஸ்வரன் கலந்து கொண்டனர்.
திருநகர் ராணி மங்கம்மாள் சாலை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தலைவர் மணிக் கலையரசன் தலைமையில் செயலாளர் சீனிவாசன் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் கணேசன், முத்துமுருகன், கண்ணன், பாண்டித்துரை, கோவிந்தராஜ், சாஸ்தா, விஷ்ணு கார்த்தி, ரகுநாதன் ஸ்ரீராம் சுந்தர் பங்கேற்றனர். திருநகர் மக்கள் மன்றம் சார்பில் அண்ணா பூங்கா அருகே இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ராமலிங்கம் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் செல்லா, கிருஷ்ணமூர்த்தி, பொன் மனோகரன், ராஜேந்திரன், பாக்கியம், குமார், கவுன்சிலர் இந்திரா காந்தி, ஜெயிண்ட்ஸ் பெடரேஷன் அலுவலர் குருசாமி, வரலாற்று ஆய்வாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.
விளாச்சேரியில் வைகை பார்வையற்றோர் நல அறக்கட்டளை சார்பில் நிறுவன தலைவர் மகாலிங்கம் கொடி ஏற்றினார். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், மாணவர்களுக்கு நோட்டு எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. முத்துமாணிக்கம் ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டனர்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் முதல்வர் ராம சுப்பையா தலைமையில் கணிதவியல் உயராய்வு மைய தலைவர் பவானி கொடியேற்றினார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர். பேராசிரியர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.
சவுராஷ்டிரா கல்லூரியில் செயலாளர் குமரேஷ் கொடி ஏற்றினார். முதல்வர் சீனிவாசன் நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டனர். என்.சி.சி. அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார். பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் முதல்வர் சந்திரன் கொடி ஏற்றினார்.
துணை முதல்வர் கணேசன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் அசாருதீன், கண்ணன், கவுரி சங்கரி, என்.சி.சி., அலுவலர் கார்த்திக் குமரன், உடல் கல்வி இயக்குனர் யுவராஜ், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விரகனூர் ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்மணி கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி கல்வியாளர் பிரபு, பெண்கள் நீதி அமைப்பு செயலாளர் கிருஷ்ணா, ஆசிரியர்கள் தேன்மொழி, அழகுமீனாள், விஜயலட்சுமி, சேகர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பூர்ண வள்ளி தொகுத்துரைத்தார்.
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முகிபாலன், நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி கொடியேற்றினர்.வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரமணி, துணைத் தலைவர் சின்னராஜா கலந்து கொண்டனர்.
ஏ.எஸ்.பி., அலுவலகத்தில் ஏ. எஸ்.பி., அஸ்வினி கொடியேற்றினார். எஸ் கோட்டைப்பட்டி பராசக்தி பள்ளியில் தாளாளர் ஜெகதீசன், அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மகேஷ்குமார், பேரூராட்சியில் தலைவர் காமாட்சி, வி.ராமசாமிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் அய்யனார், எஸ். கீழப்பட்டி ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சுமதி கொடியேற்றினர்.
டி.கல்லுப்பட்டி வார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் சந்திரா கொடியேற்றினார் பேரூராட்சியில் தலைவர் முத்துகணேசன் கொடியேற்றினார்.
மேலுார் நீதிமன்றங்களில் நீதிபதிகள் சாமுண்டீஸ்வரி பிரபா, மகாராஜா, தென்றல் முத்து கொடியேற்றினர். வழக்கறிஞர் சங்க தலைவர் திருமேனி, செயலாளர் சுரேந்தர், துணைத் தலைவர் மாணிக்கம் கலந்து கொண்டனர். மேலுார், கொட்டாம்பட்டி, மேலவளவு போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், லோகநாதன், சிவசுப்பிரமணியன், எஸ்.ஐ., முத்துக்குமரன் கொடியேற்றினர். ஜாஸ் பள்ளியில் ஷ்யாம், மில்டன் பள்ளியில் தாளாளர்கள் ரவிச்சந்திரன், ஜான் வின்சென்ட், ஆர்.வி., பள்ளியில் விஜயலட்சுமி, லதா மாதவன் கலை கல்லுாரியில் முதல்வர் ஞானசேகரன் கொடியேற்றினர்.
அரசு மருத்துவமனை ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் அரிட்டா பட்டி தனியார் ரப்பர் மில் தொழிற்சாலையில் கொடியேற்றப்பட்டது.
இந்திய தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் மணவாளன், சேகர், பிரசாத், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி நீதிமன்றத்தில் நீதிபதி செல்லையா கொடி ஏற்றினார். வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முத்துமணி, செல்வகுமார், அழகர்சாமி முன்னிலை வகித்தனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுந்தரவேல் கொடியேற்றினார். ஆர்.ஐ., கவுதம் குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பால்பாண்டியன் கொடி ஏற்றினார். செயல் அலுவலர் வாழவந்தான், முன்னாள் தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் கார்த்திக், கவுன்சிலர்கள் பூமிநாதன், ஜெயகாந்தன், சுசீந்திரன் பங்கேற்றனர். சுகாதாரப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம், கிளைச் சிறையில் சப்கலெக்டர் உத்கர்ஷ்குமார் கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலகத்தில் துணைத்தலைவர் தேன்மொழி கொடி ஏற்றினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன் கொடி ஏற்றினார். முதல்வர் பால்ராஜ், என்.சி.சி., அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ., விஜய் கொடி ஏற்றினார். வட்டாரக்கல்வி அலுவலகத்தில் அலுவலர் வடிவேல் கொடி ஏற்றினார்.
உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கண்ணனுார் கிராமசபைக் கூட்டத்தில் தனி அலுவலர் கதிரவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமதி, ஊராட்சி செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஆறுமுகசுந்தரி முன்னிலையில், தர்மவித்யாபவன் நர்சரி பள்ளியில் முதல்வர் மேகலா முன்னிலையில், தர்மவித்யா பவன் சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதல்வர் சுயம்பிரபா முன்னிலையில் பள்ளிகளின் தாளாளர் பொன்கருணாநிதி கொடி ஏற்றினார். எழுமலை அரிசன துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வளர்மதி கொடி ஏற்றினார்.
சின்னக் கட்டளை பாரதியார் நர்சரி பிரைமரி பள்ளியில் முதல்வர் ஆனந்தராஜா முன்னிலையில் நிர்வாகி பொன்திருமலைராஜன் கொடி ஏற்றினார்.
விஸ்வ வித்யாலயா பள்ளியில் தாளாளர் பாண்டியன், முதல்வர் முருகன் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் இளவரசு கொடி ஏற்றினார்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார். மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வியியல் கல்லுாரியில் முதல்வர் கருப்பசாமி, நிர்வாகி செல்வராஜ் முன்னிலையில் நிர்வாகி சுப்பிரமணி கொடியேற்றினார்.
கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் முதல்வர் செல்வகுமாரி, நிர்வாக அலுவலர் சந்திரன் முன்னிலையில் நிர்வாகி பெருமாள், பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் சுபாராஜன் முன்னிலையில் நிறுவனர் ராமகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளியில் முதல்வர் தனபாக்கியம், நிர்வாகி லோகநாதன் முன்னிலையில் நிர்வாகி சென்ன கிருஷ்ணன் கொடி ஏற்றினர்.
சோழவந்தான் பேரூராட்சியில் சேர்மன் ஜெயராமன் கொடியேற்றினார். செயல் அலுவலர் செல்வகுமார், துணை சேர்மன் லதா, கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், வேணுகோபால்,சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி பங்கேற்றனர். முள்ளிப்பள்ளத்தில் தியாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காளிமுத்து நினைவாக கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.
விவசாய சங்கத் தலைவர் யாகூப்கான், தலைமை ஆசிரியர்கள் சாந்தி, காந்தாமணி, மார்நாட்டான், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோயிலில் பொது விருந்து நடந்தது. தாசில்தார் சுந்தரவேல் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கார்த்திகைச்செல்வி துவக்கி வைத்தார். தக்கார் மாலதி, கோயில் பணியாளர்கள் நித்யா, மணி, ஜனார்த்தனன், பிரகாஷ் ஏற்பாடு செய்தனர்.
தேனுாரில் சுழியம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் ஊராட்சி தலைவர் மாயாண்டி கொடியேற்றினார். தலைவர் காந்திசெல்வம், செயலாளர் கார்த்திகைக்குமரன்,நாகேந்திரன், தினேஷ் பங்கேற்றனர். சமூக ஆர்வலர் கணேஷிற்கு தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்.,ன் வாழ்க்கை வரலாறு நுால் 'கடல்தாமரை' வழங்கப்பட்டது.
திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துலட்சுமி கொடியேற்றினார். துணை தாசில்தார்கள் வீரக்குமார், ராஜராஜேஸ்வரி, டி.எஸ்.ஓ., அய்யம்மாள் பங்கேற்றனர். நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகர் தலைமையில் நீதிபதி மணிகண்டன் கொடியேற்றினார். நீதிபதிகள் செல்வக்குமார், சாது சிவசுப்பிரமணியன், அரசு வழக்கறிஞர்கள் மூவேந்தர், மித்ரன் சக்கரவர்த்தி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் கிருஷ்ணன் பொருளாளர் விஜய் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., இமயவரம்பன் கொடியேற்றினார். நகர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் எஸ்.ஐ., முருகேசன் கொடியேற்றினார். எஸ்.ஐ., வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாலுகா ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் கொடியேற்றினார். எஸ்.ஐ., க்கள் முனியாண்டி, சிவக்குமார் பங்கேற்றனர்.
நகராட்சி அலுவலகத்தில் தலைவர் ரம்யா கொடியேற்றினார். கமிஷனர் முத்துலட்சுமி, துணைத் தலைவர் ஆதவன், கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், ரவி, ரம்ஜான் பேகம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
