ADDED : ஆக 17, 2026 01:08 AM
மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் 80வது சுதந்திர தினம் பள்ளி, கல்லுாரி, அமைப்புகள் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டது.
பள்ளி, கல்லுாரி மதுரை எம்.பி.எப்., சர்வதேச பள்ளியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ் பாண்டியன் கொடியேற்றினார். பள்ளி சேர்மன் அருணாச்சலம், தலைமை செயல் அதிகாரி செந்தில் ராஜா, முதல்வர் உதயபிரபா, இயக்குநர் சுமதி பங்கேற்றனர். புதுார் ஜான் பாஸ்கோ பள்ளியில் முன்னாள் ராணுவ வீரர் ராமன் கொடியேற்றினார். தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா அன்ட் குளோபல் அமைப்பின் மாவட்ட தலைவர் முருகேச பாண்டியன், மாநில தலைவர் பிச்சை வேல், நிர்வாகிகள் ராஜலட்சுமி, கணேஷ், சந்திரன், ஹரி பங்கேற்றனர்.
மதுரை கூடல்நகர் ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மதுரை காமராஜ் பல்கலை இயற்பியல் துறைத் தலைவர் அனிதா கொடியேற்றினார். முதல்வர் தங்கமுனியாண்டி, துணை முதல்வர் சவுந்தர்யா, பள்ளி நிர்வாகிகள் தேவன்குமார், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.இ., பள்ளியில் சுகாதாரத்துறை அலுவலர் பொற்செல்வம் கொடியேற்றினார். முதல்வர் லதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
மதுரை எஸ்.பி.ஜே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன் கொடியேற்றினார். தலைமையாசிரியர் அபர்ணா, பள்ளிச் செயலாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் துரைராஜ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் காசிராஜன் கொடியேற்றினார். பள்ளித் தலைவர் தர்மராஜ், தாளாளர் ஆனந்தகிருஷ்ணன், நிர்வாகிகள் சோமசுந்தரம், பாலாஜி, குமார் பங்கேற்றனர்.
பொது மதுரை மாநகராட்சி 9வது வார்டு இலந்தைக் குளம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வெங்கடேசன் தேசிய கொடியேற்றினார். சங்கத் தலைவர் இளங்கோவன், செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் சையது அபுதாஹிர், கார்த்திக்குமார், கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை சுப்ரமணியபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் மாநில மையம் சார்பில் நடந்த விழாவுக்கு மாநில தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா, துணைச் செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். தொழில்நுட்ப பிரிவு தலைவர் செல்வராஜ் கொடியேற்றினார். மாவட்ட பொருளாளர் செல்வக்குமார், துணைச் செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், கான்சாஒலி உட்பட பலர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரியில் முழுவிலக்கு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தல்லாகுளம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் முதன்மை பொது மேலாளர் லோகநாதன் கொடியேற்றினார். நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கிம் கொடியேற்றினார். சேர்மன் டாக்டர் ரவீந்திரன், செயல் இயக்குனர் துளசிராஜ், மண்டல மனிதவள இயக்குனர் டாக்டர் கிம், டாக்டர்கள் லலிதா, கிருஷ்ணதாஸ், பி.ஆர்.ஓ., ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை காபி, டீ வர்த்தக சங்க அலுவலகத்தில் தலைவர் சுகுமாறன் கொடியேற்றினார். உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை ஜான்சிராணி பூங்கா நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை மணிகண்டன் கொடியேற்றினார். நேதாஜி சுவாமிநாதன், யோகாச்சாரியார் அர்ஜூன் சிங் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தி தொடங்கிய ஹரிஜன சேவா சங்கம் கீழ் செயல்படும் சேவாலய மாணவர் விடுதியில் பொறியாளர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். நிர்வாகிகள் செந்தில்குமார், ரவிச்சந்திரன், அசோக்குமார், ஆசிரியர்கள் பிரியங்கா, சுகன்யா, காப்பாளர்கள் கார்த்திகேயன், அறிவழகன், முன்னாள் மாணவர்கள் சுகுமாரன், சிவமணி, ரவிக்குமார், நந்தகோபால் பங்கேற்றனர்.
கோமதிபுரம் சென்ஸ் வளாகத்தில் தலைவர் பதி கொடியேற்றினார். நிர்வாகிகள் வீரராகவன், கணேசன், சரவணன் பங்கேற்றனர்.
மதுரை சங்கீத் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் தலைவர் சொக்கலிங்கம் கொடியேற்றினார். துணைத் தலைவர் ஜெகதீசன், செயலாளர் உலகநாதன், பொருளாளர் செந்தில்குமார், மகளிர் டாக்டர் செல்வகுமாரி, செயற்குழு உறுப்பினர் ராஜ்மோகன், விக்னேஷ்வர் இண்டேன் காஸ் உரிமையாளர் பழனிராஜன் பங்கேற்றனர். ஒத்தக்கடை வேலம்மாள் நகர் குடியிருப்போர் சங்க அலுவலகத்தில் தலைவர் துரைச்சாமி கொடியேற்றினார்.
புதுார் சூர்யா நகர் சுபாஷினி நகர் குடியிருப்போர் சங்க அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ராதிகா, முத்துக்குமாரி கொடியேற்றினர். தலைவர் ஆண்டி, செயலாளர் தருமலிங்கம், பொருளாளர் உதயகுமார் உட்பட சூர்யா நகர் சுபாஷினி நகர், அல் அமீன் நகர் பகுதி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
எல்லீஸ் நகர் ஜூபிடர் குடியிருப்போர் சங்கத்தில் துணைத் தலைவர் ஈஸ்வரபிரசாத் கொடியேற்றினார். தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார்.
அவனியாபுரம் பெரியசாமி நகர், திருப்பதி நகர் குடியிருப்போர் சங்கத்தில் கவுரவத் தலைவர் குருசாமி கொடியேற்றினார். தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் அழகுராஜா, சூரியராஜன் பங்கேற்றனர்.
ஒத்தக்கடை வேலம்மாள் நகர் குடியிருப்போர் சங்கத்தில் தலைவர் துரைசாமி கொடியேற்றினார். மதுரை கலைநகர் விரிவாக்கம், பல்லவி நகர் குடியிருப்போர் சங்கத்தில் துணைத்தலைவர் பால் பேரின்பநாதன் கொடியேற்றினார். சங்க நிர்வாகிகள் குமரகுருபரன், பாலசிவா, பார்த்திபன், சேகர், பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் ஹார்விப்பட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றத் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் சீனிவாசன் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், வேட்டையார், குலசேகரன், கிருஷ்ணசாமி, குப்புசாமி, அரவிந்தன், செல்வ ரங்கராஜ் மகேந்திரராஜா, லட்சுமணன், சங்கரைய்யா, துர்காராம், கருப்பையா கண்ணன், கந்தராஜ், ராமகிருஷ்ணன், பாஸ்கர் பாண்டி, மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் பாண்டுரங்கன் கலந்து கொண்டனர். உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஹீதேஷிற்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.
வாடிப்பட்டி பொட்டுலுப்பட்டி காந்திஜி ஆரம்ப பள்ளியில் பள்ளி குழுத் தலைவர் தனபால் தலைமையில் சுதந்திர தின விழா செயலாளர் நாகேஸ்வரன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை வெங்கடலட்சுமி, சிறப்பு விருந்தினர் அழகுமுரளி, ஆசிரியர்கள் ஜான் பெட்ரிக், ஆசிர்வாதம் பீட்டர், எஸ்தர் டார்த்தி, ராஜா செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவில் பாப்பாகுடி ஏ.ஆர்.சி.டி., பூங்கா வளாகத்தில் குடியிருப்போர் நலச் சங்கத்தில் துணைத்தலைவர் குருசாமி, துணைச் செயலாளர் ராம் குமார் தலைமையில் ஆலோசகர்கள் ஆதவன், செந்தில், முத்துக்குமார் முன்னிலையில் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சோதனை ஹரிசங்கர் கொடி ஏற்றினர். பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
உசிலம்பட்டி குஞ்சாம்பட்டி பள்ளியில் தலைமை ஆசிரியர் மாலதி, ரங்கசாமிபட்டியில் தலைமை ஆசிரியர் மலர்க்கொடி, கட்டளைமாயன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் அன்பழகன் கொடி ஏற்றினர்.
நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மதன்பிரபு முன்னிலையில் ஆசிரியர் செல்வி, ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஆனந்த், உத்தப்பநாயக்கனுார் ஜெயசீலன் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ராஜ்குமார், ரத்தினசாமிநாடார் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவபிரபு முன்னிலையில் தாளாளர் அருள் மாணிக்கம் கொடி ஏற்றினர்.
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கப்பாண்டி கொடியேற்றினார். அலுவலர் அழகு துறை தலைமை வகித்தார். கிளை சிறையில் கண்காணிப்பாளர் சங்கரசுப்பு கொடியேற்றினார். கண்காணிப்பாளர் சுந்தரேஸ்வரர் கலந்து கொண்டார். தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் உதயகுமார் கொடியேற்றினார். சிறப்பு நிலைய அலுவலர் குமார், வீரர்கள் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் தலைவர் மகபூப் பாட்ஷா கொடியேற்றினார். துணைத் தலைவர் பழனிராஜ் முன்னிலை வகித்தார். ஆலோசகர் பிலாவடியான், நிர்வாகிகள் ரகுநாதன், ஜெயந்தி, வெங்கட கிருஷ்ணன், நடராஜன் கலந்து கொண்டனர்.
