/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழக தேர்தல் கமிஷனருக்கு இந்திய தேசிய லீக் கோரிக்கை
/
தமிழக தேர்தல் கமிஷனருக்கு இந்திய தேசிய லீக் கோரிக்கை
தமிழக தேர்தல் கமிஷனருக்கு இந்திய தேசிய லீக் கோரிக்கை
தமிழக தேர்தல் கமிஷனருக்கு இந்திய தேசிய லீக் கோரிக்கை
ADDED : மார் 18, 2024 07:16 AM
மதுரை : 'தேர்தல் நன்னெறி நடைமுறையில் முஸ்லீம் மக்களுக்கு மதக்கடமையை நிறைவேற்ற விலக்கு அளிக்க வேண்டும்' என தமிழக தேர்தல் கமிஷனருக்கு இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
முஸ்லீம் மக்கள்ஆண்டுக்கொரு முறைரம்ஜான் நோன்பிருந்து மாத இறுதியில் பெருநாள் கொண்டாடுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் தான் பெரும்பாலான முஸ்லீம் செல்வந்தர்கள், ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஜகாத் எனும் தங்கள் பொருளாதாரத்தில் 2.5 சதவீதத்தை தானமாக ஏழைமக்களுக்கு நிதி, பொருளாக வழங்குவது வழக்கம் . லோக்சபா தேர்தல்தேதி அறிவித்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் ஏழைகளுக்கு தானமாக வழங்க வேண்டிய பொருட்களை கொண்டு செல்கையில், பறக்கும்படையால் பறிமுதல் செய்வதன் மூலம் தேவையற்ற சிரமங்களுக்கு ஆளாக்கப்படுவோம் என்ற அச்சம் நிலவுகிறது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் கமிஷனர், முஸ்லிம்கள் தங்கள் மதக்கடமையை நிறைவேற்றும் வகையில் விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

